More than a Blog Aggregator night writter: America Vs தமிழ்நாடு

Tuesday, March 12, 2013

America Vs தமிழ்நாடு

 

என் கருத்து இதில் ஏதுமில்லை. தமிழ் வளர்க் பாடுபடுவது தமிழ்நாட்டின் கடமையா? அல்லது ..................

 

AMERICA

 
 
அமெரிக்கவைச் சார்ந்த Go4Guru ஆன்லைன் கல்வி நிறுவனம் தமிழ் வகுப்புகளை இலவசமாக துவக்குகிறது.
 
இந்த ஆன்லைன் வகுப்புகளுக்காக தமிழ் நாட்டில் பல அனுபவம் வாய்ந்த தமிழ் ஆசிரியர்கள் தேர்வு செய்யப்பட்டு, அவர்களுக்கு ஆன்லைன் பயிற்சியளிக்கப்பட்டு உள்ளது.
 
ஆறு வயதிற்கு மேற்ப்பட்ட மாணவர்கள் இந்த வகுப்பில் சேர்ந்து பயன் பெறலாம்.
 
உலகத்தில் எந்த மூலையில் இருந்தாலும் தமிழ் கற்று கொள்ள இது ஒரு அறிய வாய்ப்பு. வெப் கேமிரா மற்றும் மைக் வசதிகளுடன் இந்த ஆன்லைன் வகுப்புகள் நடைபெறுவதால் மாணவர்கள் ஆசிரியர்களை பார்த்து பேசிக் கற்றுக்கொள்ள முடியும்.
 
இந்த வகுப்புகள் முற்றிலும் இலவசமானது. மாணவர்கள் ஆன்லைன் மூலமாக வீட்டில் இருந்தபடியே இந்த வகுப்புக்களில் பங்கேற்கலாம் .
 
இந்த இலவச ஆன்லைன் வகுப்புகளில் சேர விரும்பும் மாணவர்கள் Go4Guru.com என்ற இணைய தளத்தில் தங்கள் பெயரை முன்பதிவு செய்து கொள்ளலாம். இந்த தமிழ் ஆன்லையன் வகுப்புகள் மார்ச் 15ம் தேதி முதல் ஆரம்பமாகிறது.
 

தமிழ்நாடு

 
விஏஓ தேர்வில் பொதுத்தமிழ் நீக்கம்: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு
தமிழ்நாடு
 
அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் குரூப் 2 மற்றும் வி.ஏ.ஓ. தேர்வில் பொதுத் தமிழ் பகுதி நீக்கப்பட்டுள்ளது. குரூப் 4 தேர்வுகளிலும் தமிழ் பாடத்திற்கான மதிப்பெண்கள் குறைக்கப்பட்டுள்ளன.
 
பத்தாம் வகுப்பு தேர்ச்சியை தகுதியாகக் கொண்டு எழுதும் குரூப் 4 மற்றும் வி.ஏ,ஓ தேர்வுகளில் புதிய மாற்றங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.
முன்பு  பொதுத் தமிழ் பகுதிக்கு 100 வினாக்கள்  ஒதுக்கப்பட்டிருந்தன.
 
தற்போது புதிய பாடத்திட்டத்தின் படி, பொதுத் தமிழ் பகுதி முழுவதுமாக நீக்கப்பட்டுள்ளது.
 
இதேபோல், குரூப் 2 தேர்வில், அனைத்து மதிப்பெண்களும் பொது அறிவுப்பகுதிக்கே ஒதுக்கப்பட்டுள்ன. குரூப் 4 தேர்வில் இதுவரை 100 வினாக்கள் பொது அறிவு பகுதிகளுக்கும், 100 வினாக்கள் பொதுத் தமிழுக்கும் ஒதுக்கப்பட்டது.
 
புதிய பாடத்திட்டத்தின் படி, பொது அறிவு, சிந்தித்து விடை அளித்தல், புத்தி கூர்மை உள்ளடக்கிய பகுதியில் இருந்து 150 வினாக்கள் கேட்கப்படும். இதற்காக 225 மதிப்பெண்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. எஞ்சியுள்ள 50 வினாக்கள் மட்டுமே பொதுத் தமிழில் இருந்து கேட்கப்படவுள்ளது. இதற்காக 75 மதிப்பெண்கள் வழங்கப்படும் என தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் தெரிவித்துள்ளது.


என் கருத்து இதில் ஏதுமில்லை. தமிழ் வளர்க் பாடுபடுவது தமிழ்நாட்டின் கடமையா? அல்லது ..................

No comments:

Post a Comment