More than a Blog Aggregator night writter

Friday, May 3, 2013

டி ஆரின்  

நான் முதலில் ரசித்தது டி ஆர் தான் 

இது ஜோக் பதிவல்ல. டி ஆரின் ரசிகன் என்பதில் எப்பொழுதும் பெருமைக் கொள்ளும் ஒரு சராசரி ரசிகனின் பதிவு.
 
நான் u .k .g  மற்றும் முதல் வகுப்பு படித்தது செய்யாரு (வடஆற்காடு ) பெரியம்மா வீட்டில் .
 
அப்பொழுது ஒரு நல்ல திருநாளில் என் அண்ணன் ரவி  "ஒரு தாயின் சபதம்"  அழைத்துச் சென்றார்.

அண்ணன்களின் விருப்பமமே தம்பிகளின் விருப்பமாய் 80% ஆவது இயற்கை. அது வரையில் ரஜினி தான் எங்கள் இருவரின் அபிமான ஹீரோ. ஒரு தாயின் சபதம் பார்த்த பிறகு நான் டி ஆரின் ரசிகனாய் மாறினேன்.
 
எனது அண்ணனை வம்புக்கிழுப்பதற்காகவே உனது ஹீரோ ரஜினியை எனது தலைவரிடம் வரச் சொல் அவர் கம்பியில் சுற்றி.... சுற்றி...., சும்மா, பறந்து....பறந்து...... அடிப்பார் என்று முதன்முதலாய் கருத்து வேறுபாடு மற்றும் ரசனை வேறுபாடும் உருவானது.

சண்டைக்காக மட்டுமே டி ஆரை ரசித்த நான் அதே அண்ணனின் வழிக்காட்டலில் எனது பதின் பருவத்தின் துவக்கதில்         டி ஆரின் பாடல்களின் அர்த்தம் விளங்கியது.
 
மற்றும் என் தந்தையின் - t .d .k . cassestலில் டி ஆரின் பாடல்களை national taperecord ரேடியோவில், அந்த காஸ்செஸ்ட் தேய தேய கேட்டு மகிழ்ந்த காலம் எல்லாம்  சொர்க்கம் என்றால் மிகையல்ல.
 
டி ஆரின் வரிகள் மற்றும் உவமைகளை  - இனி டி ஆரே நினைத்தாலும் வெல்ல முடியுமா என்பது கேள்விக்குரிய?????????????
 
காதல் வசபடாதவனையும் காதலின் சோகம் மற்றும் காதலின் வலியை அரியச் செய்தவர் டி  ஆர்                                           உதாரணமாய் 
 
வாசமில்லா மலரிது 
வசந்தத்தை தேடுது
வைகையில்லா மதுரை இது 
மீனாட்சியை தேடுது 
 
இந்த உவமை  யாரால் எழுத முடியும் 
 
என் தலைவன் டி  ஆரைத் தவிர 
அது மட்டுமா ?
 
 
நான் ஒரு ராசியில்லா ராஜா 
என் வாசத்துக்கு இல்லை இது வரை ரோஜா 
 
 
பாட்டிசைக்க மேடைக் கண்டேன் 
ராகங்களைக் காணவில்லை 
 
பலர் இழுக்க தேரானேன் 
ஊர்வலமே நடக்கவில்லை 
 
என்று போகும் பாடல் ஓர் இடத்தில் 
 
தோல்விதனை எழுதட்டும் வரலாறு 
துணைக்கென்று இனிமேல் யார் கூறு 
 
என்று முடியும் போது 
காதலை,
 
காதலின் வலியை இதைவிட எளிதாய்,
அதே நேரம் வலியாய்  சொல்ல  
எவனால் முடியும்,
 
 என் தலைவன் டி ஆரை தவிர 
 
இது மட்டுமா காதலிக்கின்ற பெண்ணை போற்றி புகழ,
 
அவளை 
அணு அணுவாய் ரசிக்க 
 
தடாக்கத்தில் மீன் இரண்டு
காமத்தில் தடுமாறி
தாமரை பூமீது வீழ்ந்தனவோ

இதைக்   கண்ட வேகத்தில்
 பிரமனுமும் மோகத்தில்
படைத்திட்ட பாகம் தான்
உன் கண்களோ

என்று சொல்லும்போது யார் தான் டி ஆரை ரசிக்கமால் இருக்க முடியம்

 
இது sample தான்

எவ்வளவோ விஷயம் இருந்தாலும், டி ஆர் என் தலைவன் என்பதில் பெருமைக் கொள்ளும் ஒரு

சராசரி ரசிகன்

என்றும் அன்புடன்
சந்தோஷ்  
 
 

 

No comments:

Post a Comment