More than a Blog Aggregator night writter: 2014

Tuesday, November 4, 2014

பழமொழியில் சில சில்மிஷ மொழிகள்

பழமொழி 

பழமொழிகள்  பல மொழிகளில் இருந்தாலும் தமிழ் மொழியில் இருப்பது போல வராதுனு நண்பன் ஒருவன் சொன்னான். அது உண்மை என்று  உணர, முதல எனக்கு,  பல மொழிகள்  தெரிந்திருக்கனும், அல்லது பல           பழமொழியாவது (தமிழில்) தெரிந்திருக்கனும். 

இரண்டு இல்லாத இரண்டுகெட்டானாய் முழிப்பதுக்கு பதிலா - அவன் முழி பிதுங்குமளவு அவனை மடக்க எண்ணி 

ஆமாம் பழமொழிக்கு ஏன் பழமொழினு பெயர் வந்தது? னு கேட்டேன்.

"பழமையான மொழி அல்லது சொற்தொடர்னு, அர்த்தம் அமைய வைத்திருப்பார்கள்" னு சின்ன சந்தேகம் தோணிக்கும் வகையில் சொல்ல 

அடடா ஆடு சிக்கிடிச்சி, விட கூடாதுனு 

"எனக்கு என்னவோ பழமொழிக்கு பழமொழியை விட பலமொழிங்கிறது தான் சரியா வருமுன்னு தோணுது"  னு ஒரு கொக்கிப்  போட 

எப்படினு நான் எதிர்பார்த்த அதே கேள்வியை கேணையன் கேட்க (என் நண்பன் என்னைப் போல் இல்லாமல் வேறு எப்படி இருப்பான்) 

பல அர்த்தங்கள் கொண்ட
பல விஷயங்களுக்கும் பொருந்த கூடிய, 
பல பேருக்கும் தெரிந்த, 
பல வித மக்களுக்கும் புரியும் வகையிலும், பொருந்தும் வகையிலும் இருப்பதால்
பழமொழியை விட இப்படி பல  பல கள் வரும் மொழியை 
பலமொழி என்று சொல்வதே சரினு  சொல்லி முடிக்கும் போதே  

பேயறைந்தது போல் பேந்த பேந்த முழித்துக் கொண்டே 'தான் எதற்கும் தமிழ் அகராதி  போய் பார்த்துட்டு வந்து சொல்லுறேன்' னு  எஸ்கேப் ஆக போனவனை மடக்கி 

தமிழ் அகராதியிலே - தமிழ் மொழியின் பழமொழிக்கு - பழமொழி, பலமொழி என்பதை விட பளமொழி தான் சரியான சொல் என்றிருந்தால் என்ன பண்ணுவேனு  கேட்டேன்.

பளமொழினு எப்படி இருக்கும் - பல் 
இளிக்க முயன்றவனை பாதியில் நிறுத்தி,

"பளிச்சிடும் விளக்கங்களுடன் பவளம் போல் 
பள பள வென பளக்கும் விதமாய் அமைந்த மொழிகள் தான் பழமொழிகள் எனவே அதை பழமொழி என்றும்  பலமொழி என்றும்  சொல்லாமல் பளமொழி என்று தான் சொல்ல வேண்டும் என்று இருந்தால்" 

என்று சொல்லி முடிக்கும் முன்னே மயங்கி விழுந்துட்டான் மடையன்.

அறுக்க மாட்டான் சூத்தில் 
ஆயிரத்தெட்டு 
அரிவாளாம் னு எங்க பாட்டி 
அடிக்கடி சொல்லும் 

நாகரிகமாக சொன்னா சூத்துக்கு பதிலாய் இடுப்பில்னு சொல்லலாம் 

ஓர் பழமொழி கூட முழுசா தெரிந்துக் கொள்ளாமல் நான் அடிச்ச அல்லது அடிக்க வைத்த அந்தர் பல்டிய பார்த்தா 

எங்க பாட்டி  -  மேல சொன்ன பழமொழிய  தான் சொல்லும். 

Friday, October 31, 2014

இட்லி ஓர் பார்வை

இட்லி ஓர் பார்வை

மிருதுவான இட்லிக்கு 3க்கு 1னு சொன்னா அம்மா

மிருதுவான இட்லிக்கு 4க்கு 1னும், கொஞ்சம் சோடா உப்பும்னு,  சொன்னா ஹோட்டல் மாஸ்டர்

இட்லிக்கு பால் கேட்டா குழந்தை

இட்லிக்கு சாம்பார், மூணு சட்னி மற்றும் இட்லி பொடியும் கேட்டால் ஹோட்டல் கஸ்டமர்

இட்லி மட்டும் சாப்பிடுங்கனு சொன்னா டாக்டர்

இட்லி மாசம் ஒரு முறை மட்டும் சாப்பிட்டா NRI கள் அல்லது பரம ஏழை

இட்லியை சாம்பாரில் முக்கி ஸ்பூனில் சாப்பிட்டா வடஇந்தியன்

அம்மாவின் இட்லியை குறை சொல்பவன் கல்யாணத்துக்கு காத்திருக்கும் பிரம்மசாரி

அம்மாவின் இட்லிக்கு ஏங்குபவன் வீட்டை விட்டு வெளியூரில் தங்கியிருக்கும் பிரம்மசாரி

இட்லியின் வகைகளை மட்டும் 5 நிமிஷம் சொன்னா ஹோட்டல் சர்வர்

இட்லியில் பீர் ஊத்தி அடிச்சது  'சீயான்' சாமி னா - அவருக்கு சொன்னது ஹரி

இட்லி மட்டும் கேட்பவன் "கஞ்சன்" - ஹோட்டல் முதலாளியின் பார்வையில்

ஒரு ரூபாயில் இட்லி தந்தா - தமிழகத்தின் அம்மா

இட்லியின்  ingerdientகூட தெரியாட்டாலும், திங்க மட்டும் தெரிஞ்சிருந்தா நவ நாகரிக நங்கை

இட்லியில் இன்னும் எவ்வளவோ விஷயம் இருந்தாலும், இட்லியை எனக்கு ரொம்ப பிடிச்சிருந்தாலும் கீழ உள்ளது ஏத்துக்கும்  படியாய் இருக்கு.........

இட்லியிலும் intelligentயை புகுத்தி குமட்டில் குத்தி அறிவுரை போல் சொன்னா M.R. ராதா

நீராவியை வெச்சு ரயில் விடலாமா ராக்கெட் விடலாமானு யோசிக்கிறான் வெள்ளக் காரன் ஆனா அதை வச்சி இட்லியும் புட்டும் மட்டும் செஞ்சி சாப்பிட்டுகிறான் நம ஆளு


Friday, October 24, 2014

நம்பிக்கை vs மூடநம்பிக்கை

என் பெயர் சுரேஷ்
எல்லோரும் போல நான் ஒரு சராசரி மனுசன் தான். எனக்கு என் மேல மட்டும் தான் நம்பிக்கை உண்டு.

எனக்குனு கொள்கைகள் இல்லை,

ஆனா இருக்கு .............

நான் உண்டு
என் வேலை உண்டு
என் பொழுதுப்போக்கு உண்டுனு  இருப்பேன்.

பொழுதுப்போக்குனு சொன்னா அது எனக்கு பிடிச்ச டி.ஆர்  பாட்டு கொஞ்சம், whisky கொஞ்சம்
(chivas regal  அல்லது crown royal மட்டுமே )

ஆஹா...... ஆஹா........ அற்புதம் --- ரசிச்சி குடிச்சா ரசம் தான் அமிர்தம்.

ஒரு நாள், அந்த அமிர்தம் கொஞ்சமே கொஞ்சம் அதிகமாகி சொர்கத்துக்கே கூட்டிடு போயிடிச்சி.

அளவுக்கு மிஞ்சினா அமிர்தமும்  விஷமாய்  மாறுமுனு புரிஞ்சிக்கிட்டேன்.

அட,  சொர்கத்துக்கும் போகல நரகத்துக்கும் போகல, நகரதிலேயே தான் இருந்தேன்.

ஆனா என்ன 9 மணி dutyக்கு 8.40க்கு ரிப்போர்ட் பண்ணும் நான் 9.10க்கு தான் எழுந்தேன். அடிச்சி புடிச்சி ஆபீஸ் போனா ..............

லேட்டா வரும்  லேகாகூட

சீக்கிரமே வந்து சீட்டுல சீட்ட தேச்சிக்கிட்டு,        சீட்டாதத்தை சிஸ்டமில் சிக்கீரட்டாயாடிக்கிட்டே,  சிலுமிசமாய் சிரிக்க,               சீனியர்லேல்லாம் சீரியசாய் சிந்தனையிலிருக்க.....

போதும் ப்பா  போதும் சீ சீரியஸ் -  இனிமே சீய் சீய்  சொல்ல கூட சி வராது.

மண்டே (monday ) அதுவுமாய் மண்டை  காயிறளவு மேனேஜர் முதல், முதலாளி வரை மூசுடாய் அலைய,

ஒரு நாள் லேட்டாய் வந்ததுக்கு -  இது ஓவர் ரியெக்க்ஷ்ன் டானு,

லேப்டாப்பை ஓபன் பன்னா                                  ஒரு மெயில்

 ஒரு மாசத்துக்கு முன்னாடி பண்ண ஒரு ப்ராஜெக்ட்-------- அதில்

ஒரு பெரிய problem.

எனக்கு இருக்கிற குட்டி மூளையை கசக்கி

analysis,      ஆராச்சிலிஸ்,              applyலிஸ்,       னு

வள்ளுவன் வாக்குகேப்ப

 சீரியஸாய்

ஒரு முறை ரீபொக்ராம் பண்ண

வாவ் problem sloved.

எல்லோரும்

என்னை புகழ

எல்லா புகழும் இறைவனுக்கேன்னு
ஏ. ஆர். ரகுமான் போல    

நா சொல்ல முடியாம போக,  (நா= நாக்கு,  நா= நான் )

நாத்திகனாய் இருப்பதின்
நஷ்டம் - இப்போது புரிய ...............  இந்த

நாளில்
நடந்தை யெல்லாம் எண்ணும் போது ;;;;;;;

இப்ப தான்
இந்த கதையின் துவக்கமே


இன்னைக்கு காலையிலே எழுந்ததே லேட்டு
இது முன்னாடிய சொன்னது தான்

பாத் ரூம்  போய்
பல் விளக்க
பிரஸ் எடுத்து ; பேஸ்ட் எடுத்தா அது காலி
புது பேஸ்ட் எடுத்து
பல் விளக்கினா

சரக்கு வாட
சரமாரி அடிக்க, புது பேஸ்டை
சபித்த படி,
சரைக்க சவர கத்தி எடுத்து
சரைக்க யோசிக்கும் போதே - இது
சராசரி நாள் இல்லை.          நாம
சீக்கிரம் ஆபீஸ் போனங்கிறது

புத்திக்கு  எட்ட,

புஸ் புஸ் சென்ட் அடிச்சி
புல் கை சட்டை போட்டு
பூளு கலர் பேன்ட் போட்டு
புகைச்ச படியே
புல்லட்டில் பறந்து
அலுவகம் நுழைந்த ஞாபகம் வர..............

இன்னைய வரை தினமும்
புஸ் புஸ் சென்ட் அடிச்சி
புல் கை சட்டைகள்  போட்டு
பூளு கலர் பேன்ட்கள்  போட்டு
தினம் ஒரு
புது பேஸ்ட்னு

குளிச்சி ஒரு மாசத்துக்கு மேல
ஆயிடிச்சி.........

தினமும் அந்த நாளின் அளவில் புகழ்ச்சி இல்லை என்றாராலும்.

அட்லீஸ்ட் வாட்ச்மன் ஆவது எனக்கு சிறப்பு வணக்கம் வைப்பதாய் நம்பிக்கொண்டு ........

வாழ்க்கைக்கு
நம்பிக்கை தேவை
தன்னம்பிக்கை தேவை
மூடநம்பிக்கை ...............

Friday, February 21, 2014

அண்ணாவும் facebookக்கும் --- அப்ரஹமும் மாஸ் ஹீரோவும்

அண்ணாவின் வாழ்வில் 

 


எஸ்.எஸ்.பி. லிங்கன், அறிஞர் அண்ணாதுரையின் தோழர் மற்றும் காரோட்டியாகவும் இருந்த சமயம், அவர் நினைவுகளில் இருந்து சொல்கிறார்:
ஒரு நாள், வழியில் கம்யூனிஸ்ட் கட்சி பொதுக்கூட்டம் நடந்துக் கொண்டிருந்தது. பேச்சாளர்அண்ணாதுரையை தாக்கிப் பேசுகிறார் . அண்ணாவும்  காரில் உட்கார்ந்து கேட்டுக் கொண்டிருக்கிறார்.

என்னால்(லிங்கனால்) பொறுமையாக இருக்க முடியவில்லை. "போகலாம், அண்ணாதுரை...' என்றேன். "சரி, போகலாம்...' என்றார்.
 போய்க் கொண்டே இருக்கும் போது, நான் அண்ணாதுரையிடம்...
"அவர்களுடைய கொள்கைகளை தானே நாமும் சொல்கிறோம். அப்படி இருக்க, நம்மையே தாக்குகின்றனரே... ஏன்?' என்று கேட்டேன்.

அதே சமயம், வரிசையாகச் செல்லும் இரட்டை மாட்டு வண்டிகளை கடந்து, நான் கார் ஓட்டிச் செல்ல நேர்ந்தது. ஹாரன் அடித்து ஓவர் டேக் செய்தேன். அப்போது ஒரு வண்டிக்காரன், "மெதுவா போங்கடா... கழுதைகளா!' என்று, கார் ஓட்டி வந்த என்னை திட்டினான்.

இதைக் கண்ட அண்ணாதுரை, "வண்டிக்காரன் ஏன் உன்னை திட்டினான்? அவனுக்கு பாதை விட்டுத் தான் நீ முந்திக் கொண்டு வந்தாய்.
அப்படி இருக்க, அவன் உன்னை திட்ட என்ன காரணம்?' என்று கேட்டார்;

எனக்கு பதில் சொல்ல தெரியவில்லை.

அவரே சொன்னார். "அவன் மெதுவாகப் போகிறானாம். அவனை விட நீ வேகமாக போகிறாயாம். அவனை முந்திக் கொண்டு நீ போவது அவனுக்கு பிடிக்கவில்லை. அவன் வேகத்துக்கு, அவன் பின்னால் உன்னை வரச் சொல்கிறான். மாட்டு வண்டி வேகத்துக்கு மோட்டார் வண்டி போக முடியுமா? கம்யூனிஸ்ட்களை விட, நம் கட்சி வேகமாக வளர்கிறது. அதனால் திட்டுகின்றனர். வண்டிக்காரன் உன்னை திட்டியதைப் போல...' என்றார்.

இன்று facebookகளில் பொன்மொழிகள் ஆக இடப்பட்டு பல லைக்குகளை அள்ளும் அந்த வாக்கியம்
DONT BOTHER(WORRY)
WHEN SOMEONE R BLAMING U FROM BEHIND
BECOZ U R AHEAD FROM THEM
AND THEY R STILL BEHIND U.


ABRHAM'S LIFE:

அப்ரஹம் தன் பிள்ளையை எவ்வாறு உருவாக்க வேண்டும் என்று அவன் பள்ளி ஆசிரியரிடம் கூறியது :-

  • பிறரை ஏமாற்றுவதை விட, தோற்பது கண்ணியம் என்று அவனுக்குக் கற்றுக் கொடுங்கள்.
  • சுய சிந்தனையில் நம்பிக்கை கொள்ளச் சொல்லுங்கள்.
  • மென்மையானவர்களிடம் மென்மையாகவும், உறுதியானவர் களிடம் உறுதியாகவும் நடந்து கொள்ளக் கற்றுக் கொடுங்கள்.
  • குற்றம் குறை கூறுபவர்களை அவன் அலட்சியப்படுத்தட்டும்.
  • அளவுக்கு அதிகமாய் இனிமையாகப் பேசுபவர்களிடம் அவன் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்
  • தன் மனதுக்கு சரி என்று தோன்றுவதை அவன் துணிந்து நின்று போராடி நிறைவேற்ற அவனைப் பழக்குங்கள்.

கிட்ட தட்ட ஒரு மாஸ் ஹீரோவா உருவாக்கச்  சொல்லியிருக்கார் போல(just kidding)...:)))

டிஸ்கி :: பேரறிஞரகளின் வாழ்வில் நடந்த சம்பவங்கள் மற்றும் அவர்கள் உதிர்த்த பொன்மொழிகளில், என்னை கவர்ந்தவைகளை - உங்களுடன் பகிர்தேன். இவைகள் நீங்கள் முன்னேமே அறிந்தது தான். இருந்தாலும் என் பங்குக்கு ஒரு பதிவாய் இங்கே.

Thursday, February 20, 2014

வெங்காயத்தின் கதை

இது பெரியார் சொல்லும்  வெங்காய கதை அல்ல.

பல  நூற்றாண்டுக்கு முன்பு,  மனிதன் தோட்டம் வைத்து  செடிக் கொடிகளை வளர்க்க  ஆரம்பித்த நேரம்.
 வெண்டை, கத்திரி, வெங்காயம், புடலைனு பல செடிகளை வளர்த்தான்.




எல்லாம் நல்லா  வளர்ந்து பூவாய், காயாய் பூத்து குலுங்கியது. ஆட்டை  வளர்பது ஆசைக்கில்லை என்பது போல - முதல் நாள் வெண்டைக்காயை அறுவடை செய்தான். அதுவரை தன்னோடு வளர்ந்த வெண்டைகாக,  மத்த செடியெல்லாம் அழுது புலம்பியது.
 மறுநாள் புடலையின் அறுவடை - கத்திரி, தக்காளி எல்லாம் புடலை க்காக அழுதது .
இப்படியே ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு செடியின் அறுவடையின் போதும் மற்ற செடிகள் கண்ணீர் விட்டு அழுதது.


கடைசியாய் மிஞ்சிய வெங்காயம் மட்டும் மற்ற நண்பர்கள் பிரிந்த சோகம் தாண்டி, தனக்காய் அழுவ யாருமில்லையேன்னு - இறைவனை வேண்டி அழ ஆரம்பித்தது.

கதையின் முதலிருந்தே வெறும் அழுகையாய் இருக்க, இறைவனும் வெங்காயத்தின் மேல் கருணை கொண்டு "என்ன  வரம் வேண்டும் கேள் தருகிறேன்" என்றார்.

கிளைமாக்ஸில் ஹீரோ வில்லனை பழி வாங்குவது போல வெங்காயமும்  
"தங்களை ஆசையாய் வளர்த்தவனே கழுத்தறுத்து விட்ட படியால் அவனை வஞ்சம் தீர்க்க வேண்டும், மற்றும் ஒவ்வொருவரின் சாவுக்கும் மற்றவர்கள் கண்ணீர் சிந்தினார்கள், ஆனால்  என் சாவுக்கு யாருமில்லையே .எனவே என் சாவுக்கும் யாரேனும் கண்ணீர் சிந்த வேண்டும்" என்றும் வரம் கேட்டது.

இறைவனும் அதில் நியாயம் இருப்பதால் இரண்டு வரத்தையும் மனிதன் மேல் ஏவி வெங்காயத்தை வெட்டும் போதெல்லாம் கண்ணீர் சிந்துவான் என்றார்.

இப்ப புரிதா நாம  ஏன் வெங்காயம் வெட்டும் போது கண்ணீர் சிந்துரோமுனு :)))