More than a Blog Aggregator night writter: February 2014

Friday, February 21, 2014

அண்ணாவும் facebookக்கும் --- அப்ரஹமும் மாஸ் ஹீரோவும்

அண்ணாவின் வாழ்வில் 

 


எஸ்.எஸ்.பி. லிங்கன், அறிஞர் அண்ணாதுரையின் தோழர் மற்றும் காரோட்டியாகவும் இருந்த சமயம், அவர் நினைவுகளில் இருந்து சொல்கிறார்:
ஒரு நாள், வழியில் கம்யூனிஸ்ட் கட்சி பொதுக்கூட்டம் நடந்துக் கொண்டிருந்தது. பேச்சாளர்அண்ணாதுரையை தாக்கிப் பேசுகிறார் . அண்ணாவும்  காரில் உட்கார்ந்து கேட்டுக் கொண்டிருக்கிறார்.

என்னால்(லிங்கனால்) பொறுமையாக இருக்க முடியவில்லை. "போகலாம், அண்ணாதுரை...' என்றேன். "சரி, போகலாம்...' என்றார்.
 போய்க் கொண்டே இருக்கும் போது, நான் அண்ணாதுரையிடம்...
"அவர்களுடைய கொள்கைகளை தானே நாமும் சொல்கிறோம். அப்படி இருக்க, நம்மையே தாக்குகின்றனரே... ஏன்?' என்று கேட்டேன்.

அதே சமயம், வரிசையாகச் செல்லும் இரட்டை மாட்டு வண்டிகளை கடந்து, நான் கார் ஓட்டிச் செல்ல நேர்ந்தது. ஹாரன் அடித்து ஓவர் டேக் செய்தேன். அப்போது ஒரு வண்டிக்காரன், "மெதுவா போங்கடா... கழுதைகளா!' என்று, கார் ஓட்டி வந்த என்னை திட்டினான்.

இதைக் கண்ட அண்ணாதுரை, "வண்டிக்காரன் ஏன் உன்னை திட்டினான்? அவனுக்கு பாதை விட்டுத் தான் நீ முந்திக் கொண்டு வந்தாய்.
அப்படி இருக்க, அவன் உன்னை திட்ட என்ன காரணம்?' என்று கேட்டார்;

எனக்கு பதில் சொல்ல தெரியவில்லை.

அவரே சொன்னார். "அவன் மெதுவாகப் போகிறானாம். அவனை விட நீ வேகமாக போகிறாயாம். அவனை முந்திக் கொண்டு நீ போவது அவனுக்கு பிடிக்கவில்லை. அவன் வேகத்துக்கு, அவன் பின்னால் உன்னை வரச் சொல்கிறான். மாட்டு வண்டி வேகத்துக்கு மோட்டார் வண்டி போக முடியுமா? கம்யூனிஸ்ட்களை விட, நம் கட்சி வேகமாக வளர்கிறது. அதனால் திட்டுகின்றனர். வண்டிக்காரன் உன்னை திட்டியதைப் போல...' என்றார்.

இன்று facebookகளில் பொன்மொழிகள் ஆக இடப்பட்டு பல லைக்குகளை அள்ளும் அந்த வாக்கியம்
DONT BOTHER(WORRY)
WHEN SOMEONE R BLAMING U FROM BEHIND
BECOZ U R AHEAD FROM THEM
AND THEY R STILL BEHIND U.


ABRHAM'S LIFE:

அப்ரஹம் தன் பிள்ளையை எவ்வாறு உருவாக்க வேண்டும் என்று அவன் பள்ளி ஆசிரியரிடம் கூறியது :-

  • பிறரை ஏமாற்றுவதை விட, தோற்பது கண்ணியம் என்று அவனுக்குக் கற்றுக் கொடுங்கள்.
  • சுய சிந்தனையில் நம்பிக்கை கொள்ளச் சொல்லுங்கள்.
  • மென்மையானவர்களிடம் மென்மையாகவும், உறுதியானவர் களிடம் உறுதியாகவும் நடந்து கொள்ளக் கற்றுக் கொடுங்கள்.
  • குற்றம் குறை கூறுபவர்களை அவன் அலட்சியப்படுத்தட்டும்.
  • அளவுக்கு அதிகமாய் இனிமையாகப் பேசுபவர்களிடம் அவன் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்
  • தன் மனதுக்கு சரி என்று தோன்றுவதை அவன் துணிந்து நின்று போராடி நிறைவேற்ற அவனைப் பழக்குங்கள்.

கிட்ட தட்ட ஒரு மாஸ் ஹீரோவா உருவாக்கச்  சொல்லியிருக்கார் போல(just kidding)...:)))

டிஸ்கி :: பேரறிஞரகளின் வாழ்வில் நடந்த சம்பவங்கள் மற்றும் அவர்கள் உதிர்த்த பொன்மொழிகளில், என்னை கவர்ந்தவைகளை - உங்களுடன் பகிர்தேன். இவைகள் நீங்கள் முன்னேமே அறிந்தது தான். இருந்தாலும் என் பங்குக்கு ஒரு பதிவாய் இங்கே.

Thursday, February 20, 2014

வெங்காயத்தின் கதை

இது பெரியார் சொல்லும்  வெங்காய கதை அல்ல.

பல  நூற்றாண்டுக்கு முன்பு,  மனிதன் தோட்டம் வைத்து  செடிக் கொடிகளை வளர்க்க  ஆரம்பித்த நேரம்.
 வெண்டை, கத்திரி, வெங்காயம், புடலைனு பல செடிகளை வளர்த்தான்.




எல்லாம் நல்லா  வளர்ந்து பூவாய், காயாய் பூத்து குலுங்கியது. ஆட்டை  வளர்பது ஆசைக்கில்லை என்பது போல - முதல் நாள் வெண்டைக்காயை அறுவடை செய்தான். அதுவரை தன்னோடு வளர்ந்த வெண்டைகாக,  மத்த செடியெல்லாம் அழுது புலம்பியது.
 மறுநாள் புடலையின் அறுவடை - கத்திரி, தக்காளி எல்லாம் புடலை க்காக அழுதது .
இப்படியே ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு செடியின் அறுவடையின் போதும் மற்ற செடிகள் கண்ணீர் விட்டு அழுதது.


கடைசியாய் மிஞ்சிய வெங்காயம் மட்டும் மற்ற நண்பர்கள் பிரிந்த சோகம் தாண்டி, தனக்காய் அழுவ யாருமில்லையேன்னு - இறைவனை வேண்டி அழ ஆரம்பித்தது.

கதையின் முதலிருந்தே வெறும் அழுகையாய் இருக்க, இறைவனும் வெங்காயத்தின் மேல் கருணை கொண்டு "என்ன  வரம் வேண்டும் கேள் தருகிறேன்" என்றார்.

கிளைமாக்ஸில் ஹீரோ வில்லனை பழி வாங்குவது போல வெங்காயமும்  
"தங்களை ஆசையாய் வளர்த்தவனே கழுத்தறுத்து விட்ட படியால் அவனை வஞ்சம் தீர்க்க வேண்டும், மற்றும் ஒவ்வொருவரின் சாவுக்கும் மற்றவர்கள் கண்ணீர் சிந்தினார்கள், ஆனால்  என் சாவுக்கு யாருமில்லையே .எனவே என் சாவுக்கும் யாரேனும் கண்ணீர் சிந்த வேண்டும்" என்றும் வரம் கேட்டது.

இறைவனும் அதில் நியாயம் இருப்பதால் இரண்டு வரத்தையும் மனிதன் மேல் ஏவி வெங்காயத்தை வெட்டும் போதெல்லாம் கண்ணீர் சிந்துவான் என்றார்.

இப்ப புரிதா நாம  ஏன் வெங்காயம் வெட்டும் போது கண்ணீர் சிந்துரோமுனு :)))